உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசியல் அமைப்பு தின விழா

அரசியல் அமைப்பு தின விழா

புதுச்சேரி: இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் தினத்தை முன்னிட்டு சட்டசபை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் ராஜவேலு தலைமையில் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 77-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாடு முழுதும் முகவுரை வாசிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி புதுச்சேரி அரசு சார்பில், முகவுரை வாசிப்பு நிகழ்ச்சி சட்டசபை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலை எதிரில் நடந்தது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜவேலு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். பின் அமைச்சர் தலைமையில் முகப்புரையின் உறுதி மொழி வாசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை