கட்டட ஒப்பந்ததாரர் மயங்கி விழுந்து பலி
புதுச்சேரி, : கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட கட்டட ஒப்பந்ததாரர் மயங்கி விழுந்து இறந்தார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி பேட்டையன்சத்திரம், வழுதாவூர் சாலையை சேர்ந்தவர் கணேஷ், 54; கட்டட ஒப்பந்ததாரர். இவருக்கு, கலையரசி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். கணேஷ் தினமும் கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு நடைபயிற்சிக்கு சென்ற கணேஷ், போலீஸ் மைதானத்தில் நடைபயற்சியின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைகண்ட அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர், கணேஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கலையரசி அளித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.