உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் கல்வி வளாகம் அமைக்கும் பணி

தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் கல்வி வளாகம் அமைக்கும் பணி

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில், 14 கோடியே 36 லட்ச ரூபாய் செலவில், புதிய கல்வி வளாகம் அமைக்கும் பணியை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில், மத்திய அரசின் ரூசா திட்டம் மற்றும் மாநில அரசின் நிதி பங்களிப்பின் கீழ், 43 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 14 கோடியே 36 லட்ச ரூபாய் செலவில், இரண்டு தளம் கொண்ட கல்வி வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டினார். விழாவில், அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக இணை வேந்தர் அரசு செயலர் கிருஷ்ண மோகன் உப்பு, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் அமன் ஷர்மா, துணை வேந்தர் மோகன், இயக்குனர்கள், புலத்தலைவர்கள், துறை தலைவர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய கல்வி வளாகம் அமைக்கப்படுவதன் மூலமாக, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு தேவையான கூடுல் வகுப்பறைகள் கிடைப்பதுடன், கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்க வழிவகை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !