மேலும் செய்திகள்
கட்டட தொழிலாளர் சங்க நிர்வாக கூட்டம்
23-Sep-2025
புதுச்சேரி: கட்டட தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்ப நிலவியது. கட்டட தொழிலாளர்களுக்கு, நலவாரியம் மூலம் ஆண்டுதோறும் தீபாவளிக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ரூ.5,000 வழங்கப்பட்டது. அதனை இந்தாண்டு ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. சாலை மறியல் இந்நிலையில், 60 வயதிற்கு மேற்பட்ட கட்டட தொழிலாளர்களுக்கு போனஸ் இல்லை என்ற தகவல் பரவியது. அதிர்ச்சி அடைந்த கட்டட தொழிலாளர்கள் நேற்று காலை 9:30 மணிக்கு இ.சி.ஆர்., கொக்கு பார்க் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், டி.நகர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். முற்றுகை அதனையேற்ற தொழிலாளர்கள், தட்டாஞ்சாவடியில் உள்ள நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல்வருடன் சந்திப்பு தகவலறிந்த எதிர்க்கட்சி தலைவர் சிவா, தொழிலாளர்கள் மற்றும் நலவாரிய அதிகாரி கண்ணபிரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உடன்பாடு ஏற்படாததால், தொழிலாளர்களுடன் சென்று, முதல்வரை அவரது வீட்டில் சந்தித்து நல வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தினார். கட்டட தொழிலாளர் தொழிற் சங்க நிர்வாகிகள், முதல்வரை சட்டசபையில் சந்தித்து பேசினர். நல வாரிய அதிகாரி கண்ணபி ரானும் பேச்சு வார்த்தையில் பங்கேற்றார். முதல்வர் உத்தரவு அப்போது முதல்வர் ரங்கசாமி, கடந்த காலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கியுள்ளதால், அதே நடைமுறையை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டார். அதனை ஏற்ற தொழிற்சங்க தலைவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
கட்டட தொழிலாளர் நலவாரியத்தில் மொத்தம் 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில், 8 ஆயிரம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். தணிக்கை அறிக்கை அடிப்படையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தீபாவளி போனஸ் நிறுத்தப்படுவதாக தகவல் பரவியதால் கட்டட தொழிலாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
23-Sep-2025