உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு ஓவியப்போட்டி 

 நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு ஓவியப்போட்டி 

புதுச்சேரி: நுகர்வோர் உரிமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது. மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், குடிமைப்பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் நேற்று விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுசெயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஒழுங்குபடுத்துநர் மதுரை நாயகம் வரவேற்றார். நிகழ்சியில் விருந்தினர்களாக நுகர்வோர் மறு ஆணையம் மாவட்ட தலைவர் முத்துவேல், கலைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் சம்பத் நீஸ்,மெர்குரி கிரியேட்டிவ் ஆர்ட் அகாடமி நிறுவனர் சுப்புராயன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டார். ஓவியப் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்று, நுகர்வோர் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவியங்கள் வரைந்தனர். செய்தி தொடர்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை