உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் பகுதியில் தொடர் மின்தடை; செந்தில்குமார் எம்.எல்.ஏ., எச்சரிக்கை

பாகூர் பகுதியில் தொடர் மின்தடை; செந்தில்குமார் எம்.எல்.ஏ., எச்சரிக்கை

பாகூர்; பாகூர் பகுதியில் மின்தடை பிரச்னை சரி செய்யவில்லை எனில், மக்களை திரட்டி போராடும் சூழல் ஏற்படும் என, தி.மு.க., எம்.எல்.ஏ.,செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.அவரது அறிக்கை;பாகூர் பகுதியில் தொடரும் மின் தடை பிரச்னை தொடர்பாக, பலமுறை மின்துறை அதிகாரிகளுடன் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், தீர்வு காண அரசும், மின் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. பழைய, பழுதடைந்த மின் மாற்றிகள், மின் கம்பிகள் போன்றவை தான் மின் தடைக்கு காரணம்.துாறல் மழை, லேசான காற்று வீசினால் கூட மின்சாரம் தடைபடுகிறது.பாகூர் பராமரிப்பு மற்றும் இயக்குதல் மின் துறை அலுவலகத்தில், கூடுதல் பொறுப்பு என்ற நிலைமையில், இளநிலை பொறியாளர் பணி செய்து வருவதால், விபத்து மற்றும் மின்தடையின் போது, ஊழியர்களை உடனுக்குடன் அனுப்பி அவரால் மின் தடையை சரி செய்ய முடியவில்லை.கிராமப்புறங்களில் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. சீரான மின் விநியோகம் இல்லாமல் மக்கள் துன்பப்படும் நிலையில், மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதும், பல நிலைகளில் கட்டணங்களை வசூலிப்பதும் ஏற்புடையது அல்ல. கிராமப்புற மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும்.பழுதான மின் உபகரணங்களை அகற்றி, புதிதாக பொருத்த வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் மக்களை திரட்டி போராடும் சூழல் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ