கூச் பிஹார் கோப்பை போட்டி: புதுச்சேரி அணி அபார வெற்றி
புதுச்சேரி : கூச் பிஹார் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி, அருணாச்சல பிரதேஷ் அணியை விழ்த்தி வெற்றி பெற்றது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் 19 வயதிற்கு உட்பட்ட ஆடவர் 4 நாள் கூச் பிஹார் கோப்பைக்கான போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அஹமதாபாத்யில் கடந்த 20ம் தேதி நடந்த போட்டியில் புதுச்சேரி அணியும், அருணாச்சல பிரதேஷ் அணியும் மோதின.முதலில் ஆடிய அருணாச்சல பிரதேஷ் 327 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அணியின் அப்துல் நதிர் 112 ரன்களும், அடாப் 116 ரன்களும் எடுத்தனர். புதுச்சேரியின் சந்தீப் பஸ்வான் 3 விக்கெட் எடுத்தார்.தொடர்ந்து, ஆடிய புதுச்சேரி அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 628 ரன்கள் எடுத்தது. அதில் ராகவன் அபாரமாக ஆடி 232 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங் தொடங்கிய அருணாச்சல பிரதேஷ் அணி 75 ரன்களில் ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணியின் சந்தீப் பஸ்வான் 7 விக்கெட் எடுத்தார். இதன் மூலம், புதுச்சேரி அணி இன்னிங்ஸ் மற்றும் 226 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.