உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூட்டுறவு வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தப்படும்: முதல்வர்

கூட்டுறவு வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தப்படும்: முதல்வர்

புதுச்சேரி : சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்;ரமேஷ் (என்.ஆர்.காங்.,): புதுச்சேரி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் மீண்டும் நடைமுறைக்கு வருமா?முதல்வர் ரங்கசாமி: கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் தொடர்ந்து நடைமுறையில் தான் உள்ளது. அச்சங்கத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு, நலிவடைந்துவிட்டது. ஒரு காலத்தில் சிறப்பாக செயல்பட்டது. ஆனால் தற்போது செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் அதை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறோம்.எதிர்க்கட்சி தலைவர் சிவா: இன்றைக்கு ஏழை நடுத்தர மக்கள் வீடு வாங்க வழியே இல்லாமல் உள்ளனர். இது போன்ற சூழ்நிலையில் வீட்டு வசதி வாரியமும் செயல்படாமல் முடங்கி போனால் அவர்கள் எங்கே செல்வார்கள்.வீட்டு வசதி வாரியத்துக்கு ரூ. 400 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இதை பயன்படுத்தி மீண்டும் வாரியத்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் நடுத்தர மக்கள் வீடு வாங்க முடியும்.முதல்வர் ரங்கசாமி: முத்துபிள்ளைபாளையத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அங்கு மீதமுள்ள இடத்திலும் மனைகள் கட்ட உள்ளோம். இளங்கோ நகர் வீட்டு வசதி சங்கம் நலிவடைந்துவிட்டது. இருப்பினும் வாரியம், சங்க சொத்துக்களை விற்று கடனை அடைத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கி மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி