உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள்

ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுகள்

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள நோட்டுக்கள் இருந்தது குறித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரியில் உள்ள இந்தியன், எஸ்.பி.ஐ., ஐ.ஓ.பி., மற்றும் யூ.சி.ஓ., ஆகிய 4 வங்கிகளில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பணம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பணத்தை கணக்கீடு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், அதில் இருந்த 500 ரூபாய் கட்டுகளில் 55 கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டு பிடித்தனர். இதுகுறித்து சென்னை ரிசர்வ் வங்கியின் மேலாளர் அபிஷாக் சிங்கிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, அபிஷாக் சிங் இச்சம்பவம் குறித்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் நேற்று முன்தினம் (8 ம் தேதி) புகார் அளித்தார்.அதன்பேரில், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் கள்ள நோட்டுகள் விவகாரம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை