உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வக்கீலை தாக்கிய தம்பதிக்கு வலை

 வக்கீலை தாக்கிய தம்பதிக்கு வலை

புதுச்சேரி: வழக்கறிஞரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த தம்பதியை, போலீசார் தேடி வருகின்றனர். திருபுவனை, கஸ்துாரிபாய் நகரை சேர்ந்தவர் ஜெகன், 29; வழக்கறிஞர். இவர், காராமணிக்குப்பம் சாலை வழியாக கடந்த 19ம் தேதி, பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் மனைவியுடன் வந்த நெல்லித்தோப்பு செல்வராஜ் என்பவருக்கும், ஜெகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, செல்வராஜ், அவரது மனைவி வாணி ஆகியோர் ஜெகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெகன் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, செல்வராஜ் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை