உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோர்ட் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றம்

கோர்ட் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றம்

புதுச்சேரி : கோர்ட் உத்தரவின் பேரில் ஆக்கிரமித்து கட்டிய வீடு இடித்து அகற்றப்பட்டது.நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் ரூபேஷ் மணிவண்ணன். இவர் புதுச்சேரி கோர்ட்டுக்கு ஏலம் வந்த, ரெட்டியார்பாளையத்தில் ஒரு இடத்தினை வாங்கினார். பின் அந்த இடத்தை பார்பதற்காக மணிவண்ணன் ரெட்டியார்பாளையம் சென்றார்.அந்த இடத்தில் ஒருவர் வீடு கட்டிக் கொண்டு இருந்தார். அதிர்ச்சியடைந்த மணிவண்ணன் மீண்டும் புதுச்சேரி கோர்ட்டில் இது தொடர்பாக முறையிட்டார். இதையடுத்து அந்த இடத்தை மீட்டு தரக்கோரி நீதிபதி உத்தரவிட்டார். கோரிமேடு போலீசார் முன்னிலையில், வருவாய் துறை அதிகாரிகள், கோர்ட் அமினா அம்பி ஆகியோர் ஆக்கிரமிப்பு வீட்டை இடித்து அகற்றி, இடத்தை மீட்டு, மணிவண்ணிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி