உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி பசுமாடு பலி 

மின்சாரம் தாக்கி பசுமாடு பலி 

பாகூர்: பாகூரில் பசுமாடு மின்சாரம் தாக்கி இறந்தது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், பாகூர் தாங்கள் செல்லும் வழியில் உள்ள வாய்க்காலில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது.  இந்நிலையில், நேற்று மதியம் பாகூர், பழைய காமராஜர் நகரச் சேர்ந்த ராஜவேணி, 75, என்பவரது பசுமாடு மேய்ச்சலுக்காக சென்றபோது தண்ணீர் குடிக்க வாய்க்காலில் இறங்கியது. அப்போது மின்சாரம் தாக்கி பசு மாடு இறந்தது. மேலும், வாய்க்காலில் மின்சாரம் தாக்கி கிரீபிள்ளை மற்றும் மீன்களும் இருந்து கிடந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து மின்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மின் துறை ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, இறந்த பசுமாட்டை கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி