உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹெலிபேடு மைதானத்தில் மாடுகள் :வாக்கிங் செல்லுவோர் அச்சம்

ஹெலிபேடு மைதானத்தில் மாடுகள் :வாக்கிங் செல்லுவோர் அச்சம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளால், நடைபயிற்சி மேற்கொள்வோர் அச்சமடைகின்றனர். லாஸ்பேட்டை, ஏர்போர்ட் ெஹலிபேடு மைதானத்தை சுற்றிலும் ஏராளமான பொதுமக்கள் காலை, மாலையில் நடைபயிற்சி செல்கின்றனர். மைதானத்தை சுற்றிலுள்ள இடங்களில் பள்ளி மாணவர்களும் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மைதானங்களில் கும்பலாக சுற்றித் திரியும் கால்நடைகளால் மாணவர்கள், பொது மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. அதே போல் சாலைகளில் குறுக்கே புகும் மாடுகளால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும், கால்நடைகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் போது, எங்கே நம்மை தாக்கிவிடுமோ என, அப்பகுதியில் செல்லுவோர் அச்சமடைகின்றனர். எனவே ெஹலிபேடு மைதானத்தில், சுற்றித் திரியும் கால்நடை உரிமையாளர்கள் மீது உழவர்களை நகராட்சி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !