உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டெங்குவை கட்டுப்படுத்தக் கோரி இ.கம்யூ., செயலாளர் மனு

டெங்குவை கட்டுப்படுத்தக் கோரி இ.கம்யூ., செயலாளர் மனு

புதுச்சேரி: அரியாங்குப்பம் கொம்யூனில் டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தக் கோரி இ.கம்யூ., அரியாங்குப்பம், மணவெளி தொகுதி செயலாளர் சுகதேவ் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தியை சந்தித்து மனு அளித்தார். மனுவில், ‘அரியாங்குப்பம் கொம்யூனில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதால், நோணாங்குப்பம், தவளக்குப்பத்தில் தலா ஒரு பெண் இறந்துவிட்டனர். அரியாங்குப்பம் கொம்யூனுக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். மருத்துவ முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது இ.கம்யூ., மூத்த நிர்வாகி கீதநாதன், சிவராஜ், முத்துவேல், ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை