மேலும் செய்திகள்
உண்டியல் உடைத்த வழக்கு; ஒருவர் கைது
06-Oct-2024
அரியாங்குப்பம்: கிரேன் ரோப் உள்ளிட்ட பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வானுாரை சேர்ந்தவர் கண்ணன், இவருக்கு சொந்த மான கிரேனை, அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் அருகே கடந்த 17ம் தேதி நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் வந்து பார்த்தபோது, கிரேனில் இருந்த இருப்பு ரோப், மோட்டார், உதிரி, டூல்ஸ் உள்ளிட்ட 46 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து அவர், அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் கொம்பாக்கத்தை சேர்ந்த வேல்முருகன், 28; டிரைவர் மணிகண்டன், 28; ஆகியோர் கிரேனில் திருடியது தெரியவந்தது.இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து, அவர்கள் வைத்திருந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும், நீதிமன்றத்தில், ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில், அடைத்தனர். மேலும், இந்த திருட்டு வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளியான டிப்பர் லாரி உரிமையாளர் மணி (எ) மணிகண்டனை போலீசார் தேடிவருகின்றனர்.
06-Oct-2024