உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசுப் பள்ளியில் படைப்பாற்றல் விழா

 அரசுப் பள்ளியில் படைப்பாற்றல் விழா

புதுச்சேரி: பாக்கமுடையான்பட்டு அரசு துவக்கப் பள்ளியில் படைப்பாற்றல் விழா நடந்தது. ஆசிரியர் நளினி தேவி வரவேற்றார். தலைமை ஆசிரியர் கலைவாணி தலைமை தாங்கினார். ஓய்வுப் பெற்ற ராணுவ வீரர் பெரியசாமி, அரிமதி இளவேங்கை முன்னிலை வகித்தனர். காலாப்பட்டு மத்திய சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பங்கேற்று, படைப்பாற்றல் கலை விழாவை துவக்கி வைத்து, பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி, கல்வி, அறிவு, ஒழுக்கம், உணவு, உடற்பயிற்சி, சுயக்கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், சமூக ஊடகங்களை பாதுகாப்போடு பயன்படுத்தும் வழி முறைகள் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளும் முறைகள் குறித்துப் பேசினார். மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியர் ரம்யா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் அந்தோனிசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜபிரியா, நளினி மற்றும் கிரிஜா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ