கிரிக்கெட் மைதானம் எஸ்.பி. ஆய்வு
புதுச்சேரி: துத்திப்பட்டில் நடக்கும் கிரிக்கெட் போட்டி மைதானத்தை சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்னண ஆய்வு செய்தார். சேதராப்பட்டு அடுத்த துத்திப்பட்டில், இந்தியா ஏ, மற்றும் ஆஸ்திரேலியா ஏ, அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் நேற்று மைதானத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.