கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
புதுச்சேரி: புதுச்சேரி எக்ஸ்போ 11 கிரிக்கெட் அணி சார்பில், முதலாமாண்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது. போட்டியில், புதுச்சேரி, தமிழகத்தில் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் புதுச்சேரி எக்ஸ்போ -11 அணி முதல் பரிசு பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு வழக்கறிஞர் மருதுபாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில் சுரேஷ்குமார், மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.