உள்ளூர் செய்திகள்

‘கிரைம் பீட்’

1 கிலோ கஞ்சா கடத்தல்: வாலிபர் கைது: முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் வேல்ராம்பட்டு ஏரிக்கரை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரை சோதனை செய்தனர். அவரிடம் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில், அவர் வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த எழிலரசன் மகன் ருத்ரகுமார்,23; என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து புதுச்சேரி பகுதியில் விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது. ருத்ரகுமாரை கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்ற இருவர் கைது: புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். ஜெயா நகர் பகுதியல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், ரெட்டியார்பாளையம் ஜெயச்சந்திரன் மகன் மணிகண்டன், 29, என்பதும் அவர் விற்பனை செய்வதற்காக 700 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மற்றொரு சம்பவம்:: காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு பிள்ளைச்சாவடி பகுதியில் ரோந்து சென்றனர். தனியார் ரிசார்ட் அருகில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து, விசாரித்தனர். அவர், வம்பாகீரப்பாளையம், பலாசுப்ரமணியன் மகன் சரவணன்,21; என்பதும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பெட்டி கடையில்: குட்கா பறிமுதல்: வீராம்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் நேற்று அந்த கடையை சோதனை நடத்தினர். அங்கு, குட்கா பாக்கெட்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். கடை உரிமையாளர் வீராம்பட்டினத்தை சேர்ந்த மல்லிகா, 73; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 4,700 மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொழிலதிபர் தற்கொலை:   முருங்கப்பாக்கம், அரவிந்தர் நகரில் வசித்தவர் கனகராஜ், 62. இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்தாண்டு விபத்தில் சிக்கிய அவர், சரிவர ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி, சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டுவிட்டு மாடியில் உள்ள அறையில் துாங்க சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் அவர் வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அறையில் துாக்கில் தொங்கியது தெரிந்தது. அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் வழிலேயே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ