உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கொத்தனார் தற்கொலை: பாகூர்; சிதம்பரம் பெரிய தெருவை சேர்ந்தவர் கல்யாணி 65; இவரது இளைய மகன் ஜீவானந்தன், 25; கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தில் தனியார் குடியிருப்பில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்தார். ஜீவானந்தன் மாதம் ஒருமுறை வீட்டிற்கு சென்று சம்பளத்தை கொடுத்து விட்டு மீண்டும் வேலைக்கு வந்து விடுவார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அவருடன் வேலை செய்து வரும் காட்டுமன்னார்குடியை சேர்ந்த ரஞ்சித் என்பவர், ஜீவனந்தனை வேலைக்கு அழைத்து செல்ல அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்றார். அப்போது, ஜீவானந்தன் மின் விசிறியில் இறந்த நிலையில் துாக்கில் தொங்கினார். அவரது தாய் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை