/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சன்டே மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம் ; ட்ரோன் மூலம் போலீஸ் கண்காணிப்பு
சன்டே மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம் ; ட்ரோன் மூலம் போலீஸ் கண்காணிப்பு
புதுச்சேரி : சன்டே மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டத்தை ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்தனர். தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடந்த வாரம் முதல் நேரு வீதி, அண்ணா சாலை துணி கடைகளில் தீபாவளி விற்பனை துவங்கியது. நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால், காந்தி வீதி சன்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது. தீபாவளி பண்டிகைக்கு துணிகள் வாங்க சன்டே மார்கெட் மற்றும் நேரு வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நேரு வீதி, காந்தி வீதி சந்திப்பில் வாச் டவர் அமைத்தும், சாதாரண உடையில் மக்களோடு மக்களாக கண்காணிக்கும் பணியும் நடந்தது. பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.