உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை: கடலுார் வாலிபர்கள் கைது

பொது இடத்தில் ரகளை: கடலுார் வாலிபர்கள் கைது

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கிருமாம்பாக்கம் போலீஸ் சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, முள்ளோடை சந்தை திடலில் இரண்டு பேர் குடி போதையில், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டியபடி, ரகளையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். கடலுார், செல்லாங்குப்பம் ஆகாஷ், 20; சேடப்பாளையம் குருபார்த்தி, 19, என, தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ