மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் ஐம்பெரும் விழா
16-Apr-2025
பாகூர்: கிருமாம்பாக்கம் ராஜிவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவர்களுக்கான இரண்டு நாள் கலாசார விழா நடந்தது.விழாவினை, கல்லுாரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். துணை முதல்வர் அய்யப்பன், துறை தலைவர்கள் மற்றும் கலாசார குழுவின் மாணவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கான பரத நாட்டியம், மேற்கத்திய நடனம், தனிநபர் பாடல், தனிநபர் மற்றும் குழு நடனம் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கல்லுாரி முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுளை கல்லுாரி நிர்வாகம், கலாசார குழு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் மாணவ பிரதிநிதிகள் செய்திருந்தனர்.
16-Apr-2025