சைபர் கிரைம் விழிப்புணர்வு
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கு சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் சார்பில், நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் சுரேஷ்ராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சைபர் கிரைம் குற்றங்களில் சிக்காமல் இருப்பது குறித்து விளக்கம் அளித்தனர். நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.