உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சைபர் கிரைம் விழிப்புணர்வு

சைபர் கிரைம் விழிப்புணர்வு

புதுச்சேரி : முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இணைய வழி குற்றங்கள் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி மகளிர் ஆணையம் சார்பில், நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, ஆணையத்தின் தலைவி நாகஜோதி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற சைபர் குற்ற பிரிவு எஸ்.பி., பாஸ்கரன் கலந்து கொண்டு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணைய வழி குற்றங்கள் குறித்தும், இணைய வழியை பாதுகாப்பாக கையாளுதல், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மகளிர் ஆணைய உறுப்பினர்கள் அன்பரசி, சந்திரா உட்பட பலர் பங்கேற்றனர். மகளிர் ஆணைய உறுப்பினர் சுஜாதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி