உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10 பேரிடம் ரூ. 10 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

10 பேரிடம் ரூ. 10 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்கள் உட்பட 10 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 10 லட்சம் இழந்துள்ளனர். வடமங்கலத்தை சேர்ந்த பெண்ணை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதைநம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக அப்பெண் ரூ. 7 லட்சத்து 8 ஆயிரத்து 112 முதலீடு செய்தார். பின், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், சாரத்தை சேர்ந்தவர் 55 ஆயிரம், அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 55 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் 45 ஆயிரம், முதலியார்பேட்டையை சேர்ந்தவர் 20 ஆயிரத்து 500, அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்த பெண் ஆன்லைனில் துணி ஆர்டர் செய்து 5 ஆயிரத்து 426, பூமியான்பேட்டையை சேர்ந்தவர் 22 ஆயிரத்து 796, சேதராப்பட்டைச் சேர்ந்தவர் 39 ஆயிரம், லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 44 ஆயிரம் என, 10 பேர் மோசடி கும்பலிடம் 10 லட்சத்து 17 ஆயிரத்து 630 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ