உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 6 பேரிடம் ரூ. 2.86 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

6 பேரிடம் ரூ. 2.86 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆறு நபர்களிடம், ரூ. 2 லட்சத்து 86 ஆயிரம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என இருந்துள்ளது. இது உண்மை என நம்பிய அவர், ரூ. 2.5 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார்.நல்லவாடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் என, மர்ம நபர் கூறியதை நம்பி ரூ. 27 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தார். கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மொபைல் போனில் உள்ள செயலில் மர்ம நபர் பணம் கேட்டு லிங்க் அனுப்பியுள்ளார். அதனை அந்த நபர், கிளிக் செய்தபோது, அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 24 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.கரையாம்புத்துாரை சேர்ந்தவரை, மர்ம நபர் தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு விவரங்களை கேட்டுள்ளார். அந்த நபரும் விவரங்களை தெரிவித்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 22 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.வில்லியனுார் அடுத்த சுல்தான்பேட் பகுதியை சேர்ந்த நபரின், புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி ரூ. 3 ஆயிரம் பறித்துள்ளனர். முத்தியால்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர், இணையதளத்தில் ஆடை வாங்க ரூ. 5 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். ஆறு பேரும் மொத்தம் 2 லட்சத்து 8௬ ஆயிரத்தை, மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள், தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி