உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி: வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் புதுச்சேரி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியல் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் டகுதியில் புயலாகவும், நாளை 17ம் தேதி மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாகவும் வலுப்பெறும். இதையடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை