மேலும் செய்திகள்
செய்தி எதிரொலி பழுதான டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு
18-Sep-2026
திருபுவனை: திருபுவனை பகுதியில் பெய்த கனமழையின்போது இடி விழுந்ததில் பல்வேறு இடங்களில் மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதானது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன், பெய்த கன மழை மற்றும் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய பலத்த மழையின்போது பி.எஸ். பாளையம், திருபுவனை பாளையம், நல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் இடி விழுந்ததில் மின்சார தொடர்களில் இன்சுலேட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் வெடித்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருபுவனைபாளையம் பகுதியில் இடி விழுந்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ், மின்விசிறி இன்வெர்ட்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுதானது. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். நல்லுார் கிராமத்தில் வயல்வெளி பகுதியின் மின்சார தொடரில் இன்சுலேட்டர் வெடித்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்துறை ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று மாலை மின்சாரம் வழங்கப்பட்டது.
18-Sep-2026