மேலும் செய்திகள்
மகளை காணவில்லை தந்தை போலீசில் புகார்
27-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்கி, வேலை செய்து வந்த மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். கும்பகோணம், திருபுரம்பயம், எட்டுகொட்டான் குடி, கீழதெருவை சேர்ந்தவர் செல்லத்துரை, கூலி தொழிலாளி. இவரது மகள் சிவபிரியா, 24. புதுச்சேரி, சாரத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி, சுத்துக்கேணியில் இயங்கி வரும் தனியார் மருந்து தயாரிப்பு கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 11ம் தேதி இரவு 7:30 மணிக்கு விடுதியில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது தாய் வெண்ணிலா அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷன் 0413- 2272121 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
27-Oct-2024