மேலும் செய்திகள்
கண் தானம் விதிமுறை மாறுகிறது
07-Dec-2024
மூதாட்டியின் உடல் தானம்
04-Dec-2024
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் இறந்த சிறுவனின் கண்களை பெற்றோர் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். புதுச்சேரி, லாஸ்பேட்டை, ஆனந்தா நகர், அன்னை வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மகாலட்சுமி, லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளராக உள்ளார்.இவர்களின் குழந்தை நவதீப், 11; உடல்நிலை குறைவால் நேற்று (9ம் தேதி) காலை 7:56 மணிக்கு இறந்தார். பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இறந்த நவதீப் கண்களை தானம் செய்ய, முடிவு செய்து ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனாரை தொடர்பு கொண்டனர். அவரது வழிகாட்டுதல்படி, அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ஹரிபத்ரி தலைமையில் செவிலியர்கள் காயத்ரி, வைஷாலி ஆகியோர் விரைந்து வந்து கருவிழிகளை சேகரித்தனர். இதன் மூலம் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்த நான்கு நபர்களுக்கு பார்வை கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் டாக்டர் லட்சுமிபதி, நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார், ரத்ததானம் கண்தானம், உடல்தானம் பதிவு ஆலோசகர் கந்தசாமி, பாலு மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். இதுவரை இந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறப்பிற்கு பின், தங்களது கண்களை தானமாக 2012ம் ஆண்டு முதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
07-Dec-2024
04-Dec-2024