உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காது கேளாதோர் பிரீமியர் லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி

காது கேளாதோர் பிரீமியர் லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி

புதுச்சேரி : புதுச்சேரி காது கேளாதோர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஏனாம் நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன்ஷிப் கோப்பை வென்றது.புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சார்பில், முதலாண்டு காது கேளாதோர் பிரீமியர் லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் துத்திப்பட்டு, புதுச்சேரி கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது.இதில், புதுச்சேரி லயன்ஸ், காரைக்கால் டைகர்ஸ், மாகே பபலோ, ஏனாம் நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் ஏனாம் நைட்ரைடர்ஸ் அணி 12 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய புதுச்சேரி லயன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து, 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சிலின் பொதுச் செயலாளர் பாசித் தலைமை தாங்கி, இறுதிபோட்டியில் வெற்றி பெற்ற ஏனாம் நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன்ஷிப் சுழற்கோப்பை வழங்கினார். அமைப்பு செயலாளர் சத்தியபுவனம், தலைவர் அய்யப்பன், ராஜேஷ், வழக்கறிஞர் சரவணன், ஹபிலா, அஜித்குமார், சக்திமுருகன், ரவிக்குமார், ராஜபிரபாகரன், பாக்கியராஜ், ஜனா, பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை