உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி:லாஸ்பேட், அவ்வை நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 35; வழக்கறிஞர். இவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கோழியை, கடந்த 22ம் தேதி எதிர்வீட்டை சேர்ந்த விகாஸ் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பூனை பிடித்து சென்றுள்ளது. இதனால் கோழியை காப்பாற்ற கார்த்திகேயனின் தந்தை கண்ணையன் சென்றபோது, விகாஸ் மற்றும் அவரது மனைவி அஞ்சல் அகியோர் அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து கடந்த 26ம் தேதி கார்த்திகேயன், விகாஸிடம் கேட்டபோது, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், விகாஸ் மற்றும் அவரது மனைவி அஞ்சல், நண்பர் ஜோயல் ஆகியோர் கார்த்திகேயனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை