உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தம்பதிக்கு கொலை மிரட்டல்

தம்பதிக்கு கொலை மிரட்டல்

நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார், களிஞ்சிக்குப்பம் ரோட்டைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 36. இவர் வீட்டிற்கு செல்லும் வழியை மறித்து அதே பகுதியைச் சேர்ந்த முருகன், ராஜாராம் ஆகியோர் கம்பி வேலி போட்டனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று வர வழிவிட புதுச்சேரி கோர்ட் அறிவுறுத்தியது.அதன்படி கார்த்திகேயன் குடும்பத்தினர் அந்த வழியை பயன்படுத்தி வந்தனர். நேற்று முன்தினம் மழையால் சேதமான வீட்டு கொட்டகையை கார்த்திகேயன் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜாராம், கார்த்திகேயனை அவரை தாக்கினார். தட்டிக்கேட்ட அவரது மனைவியையும் கருங்கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.கார்த்திக்கேயன் கொடுத்த புகாரின் பேரில், கரையாம்புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து ராஜாராமை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !