பெண்ணிற்கு கொலை மிரட்டல்
புதுச்சேரி: புதுசாரம், தென்றல் நகரைச் சேர்ந்த செல்வம் மகள் நித்தியா, 35; தனது 2 பெண் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நித்தியாவிற்கு தெரிந்த, ரவி அண்ணாமலை, 58; என்பவர் கடந்த சில மாதங்களாக அவரை பின் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த நித்தியா அளித்த புகாரின் பேரில், டி நகர் போலீசார், ரவி அண்ணாமலையை அழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ரவி அண்ணாமலை கடந்த (14ம் தேதி) இரவு நித்தியாவின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கியதுடன், கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். நித்தியா புகாரின் பேரில், டி. நகர் போலீசார் ரவி அண்ணாமலை மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.