உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிதாக 531 பணியிடங்களை நிரப்ப முடிவு: சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதிதாக 531 பணியிடங்களை நிரப்ப முடிவு: சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 305 ஆஷா பணியிடங்கள் உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:செந்தில்குமார் (தி.மு.க.,): பாகூர், கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர், மருந்தாளுநர், அரசு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதை அரசு அறியுமா. இதை நிரப்ப அரசு முன்வர வேண்டும்.முதல்வர் ரங்கசாமி: தற்போது காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. 226 செவிலியர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். டாக்டர்கள், மருந்தாளுநர் பணியிடங்களும் நிரப்பப்படும். 305 ஆஷா பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்கள் அனைத்து தொகுதிக்கும் பணியாற்ற பிரித்து அனுப்பப்பட உள்னர். இதன் மூலம் சுகாதார நிலையங்களில் பணியாளர்கள் பிரச்னை தீரும்.இதையடுத்து ஆஷா பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தர, அனைத்து கட்சி எம்.எல். ஏ.,க்களும் ஒட்டு மொத்தமாக எழுந்து கோரினர். உதவி மகப்பேறு செவிலியர்களுடன் ஆஷா பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.அனைத்து பணிகளையும் இணைந்து செய்கின்றனர். ஆனால் தற்போது 4 மணி நேரம் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதனால் அவர்களுக்கு போனஸ் கூட கிடைக்கவில்லை. அவர்களை 8 மணி நேர பணி வரம்பிற்கு கொண்டு வந்து சம்பளத்தை 18 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்.அவர்கள் சுடிதார் அணியவும் அனுமதிக்க வேண்டும். இதேபோல் கொரோனா தொற்றின்போது உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவியர்கள், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஒட்டுமொத்தமாக எழுந்து வலியுறுத்தினர்.இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி: ஆஷா பணியாளர்கள் சம்பள பிரச்னையை எம்.எல்.ஏ.,க்கள் அக்கறையோடு பேசுகிறீர்கள். அரசுக்கும் அக்கறை உள்ளது. ஆஷா பணியாளர்களுக்கு மத்திய அரசு ரூ. 3 ஆயிரம் தான் வழங்குகிறது. மாநில அரசு நிதியில் கூடுதலாக ரூ. 7 ஆயிரம் வழங்கி ரூ. 10 ஆயிரம் சம்பளம் தருகிறோம். அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கிடைக்கிறது.ரொட்டி பால் ஊழியர்களை போன்று ஆஷா பணியாளர்களுக்கு 18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் கேட்கின்றனர். ஆனால் ரொட்டி பால் ஊழியர்கள் பல்நோக்கு ஊழியர்களாக உள்ளனர். அவர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.ஆனால் ஆஷா பணியாளர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சம்பளம் உயர்த்துவது குறித்தும், சீருடை தருவதும் குறித்து பரிசீலனை செய்வோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிதாக 205 ஆசிரியர்கள்

நியமிக்க முடிவுகேள்வி நேரத்தில் அரசு கொறடா ஆறுமுகம் பேசும்போது, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை போக்க வேண்டும். ஒரே ஆசிரியர் பல பள்ளிகளுக்கு சென்று பாடம் எடுக்கின்றார் என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், பல ஆண்டுகளாக நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். 182 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க உள்ளோம். புதிதாக 205 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம். இதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகிறது என்றார்.

புதிதாக 205 ஆசிரியர்கள்

நியமிக்க முடிவுகேள்வி நேரத்தில் அரசு கொறடா ஆறுமுகம் பேசும்போது, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை போக்க வேண்டும். ஒரே ஆசிரியர் பல பள்ளிகளுக்கு சென்று பாடம் எடுக்கின்றார் என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், பல ஆண்டுகளாக நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். 182 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க உள்ளோம். புதிதாக 205 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம். இதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி