உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரை சாலையில் சி.சி.டி.வி., பொருத்த முடிவு 

கடற்கரை சாலையில் சி.சி.டி.வி., பொருத்த முடிவு 

புதுச்சேரி: புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங் களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டத் துவங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை முதலே சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படை எடுத்து வருவதால், போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் டிச., 31ம் தேதி மாலை முதல் 1ம் தேதி நள்ளிரவு வரை நடக்கிறது. இதில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்பர் என்பதால், நகரப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே, புத்தாண்டு பாதுகாப்பை அதிகரிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, புதுச்சேரி போலீஸ் சார்பில், புதுச்சேரி கடற்கரை சாலை, செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை, பாரதி பூங்கா, சுப்பையா சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.புத்தாண்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சீனியர் எஸ்.பி., தலைமையில் 400க் கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடயுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !