உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி, காரைக்காலில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க முடிவு

புதுச்சேரி, காரைக்காலில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ் சங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு பேரவை தலைவர் குமரகுரு தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் பசுபதி, நாகமணி, துளசி, மதிவாணன், ஸ்ரீதரன், பொருளாளர் செந்தில் முருகன், செயலாளர்கள் சோழன், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை, நம்ம சாமி நம்ம கோவில், நாமே பாதுகாப்போம் என்னும் பெயரில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழகம் புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களை பாதுகாக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று 3 அடி முதல் 21 அடி வரை விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்கு வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கவர்னர், முதல்வர், சபாநாயகர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சிறப்பு அழைப்பாளராக அழைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி