உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செயல் விளக்க கூட்டம்

செயல் விளக்க கூட்டம்

புதுச்சேரி: வண்ணார் சமுதாய முன்னேற்ற மத்திய கூட்டமைப்பின் சார்பில், 9வது செயல் விளக்க கூட்டம் நடந்தது.புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு கவுரவ தலைவர் கண்ணையன் தலைமை தாங்கினார். தலைவர் கலியபெருமாள், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழக வண்ணார் குல ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிரகாஷ், வெங்கடாஜலபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.வண்ணார் சமூகத்தை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவும், தமிழகத்தை போல, புதுச்சேரியில் சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். மழைக் காலங்களில், நிவாரணம், காஸ் இஸ்திரி பெட்டி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் கங்காதரன், துணை தலைவர்கள் பிரபுராமன், லதா, துணை செயலாளர்கள் சீதாராமன், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ