உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரிசிக்கான பணத்தை வழங்க வலியுறுத்தல்

அரிசிக்கான பணத்தை வழங்க வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் 8 மாத அரிசிக்கான பணத்தினை வாங்காத அனைத்து அட்டைதாரர்களுக்கும் அரசு உடனே வழங்க வேண்டும் என, நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ ., கார்திக்கேயன் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைகளை, எந்தவித முன்னறிவிப்பு இன்றி மஞ்சள் நிற அட்டையாக புதுச்சேரி குமைப் பொருள் வழங்கல் துறை மாற்றம் செய்து வருகிறது. வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைகளை மஞ்சள் நிற அட்டைகளாக மாற்றுவது வேதனைக்குரியது. இது மத்திய அரசின் வழிகாட்டுதல் என்று புதுச்சேரி அரசு ஒதுங்கி விட முடியாது. புதுச்சேரி மக்களை நேரடியாக பாதிக்கும் செயல் என்பதால் இதில் புதுச்சேரி அரசு தலையிட வேண்டும். இ.கே.ஒய்.சி., விபரங்களை புதுப்பிக்காத அட்டைதாரர்களுக்கு, 8 மாத அரிசிக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. ஏழை மக்களுக்கும், அன்றாடம் தின கூலி வேலை செய்பவர்களுக்கும் சென்று சேர வேண்டிய இந்த பணம், புதுச்சேரி அரசால் வழங்கப்படவில்லை என்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு, பழைய நிலையிலேயே குடும்ப அட்டைகளை, அதாவது, சிவப்பு நிற அட்டைகளை வழங்க வேண்டும். 8 மாத அரிசிக்கான பணத்தினை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !