உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேதமான வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

சேதமான வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

புதுச்சேரி: முழுதும் சேதமடைந்த வீடுகளுக்கு, ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.அவர், முதல்வர் ரங்கசாமியிடம் அளித்த மனு; பெஞ்சல் புயல் மழையால் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் அறிவித்த முதல்வருக்கு நன்றி. கனமழையால் வீடூர், சாத்தனுார் அணைகள் திறக்கப்பட்டதால், மலட்டாறு, தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, புதுச்சேரி கரையோர கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் முழ்கியது.உப்பனாறு வாய்க்கால் உடைப்பு காரணமாக உருளையன்பேட்டை, காமராஜர் நகர், உப்பளம் தொகுதிகளின் பல இடங்களில் 5 அடிக்கு மேல் தண்ணீர் வீடுகளில் புகுந்தது. எனவே, முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணமாக முழுதும் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில், கூறப்பட்டுள்ளது.நிர்வாகிகள் அன்பானந்தம், மகாதேவி, கணேசன், திருநாவுக்கரசு, ரவி பாண்டுரங்கன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை