மேலும் செய்திகள்
புதுச்சேரியில் 12 முதல் ஹெல்மெட் கட்டாயம்
08-Jan-2025
புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் ஹெல்மெட் கட்டாயசட்டத்தை தளர்த்த வேண்டுமென இந்திய கம்யூ., வலியுறுத்தியுள்ளது.மாநில செயலாளர் சலீம் அறிக்கை:புதுச்சேரியில், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் அமலுக்கு வந்துள்ளது. வேகமாக வாகனங்களை ஓட்டும் போது ஹெல்மெட் அவசியம்.ஆனால்,புதுச்சேரி போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. முதியவர்கள் தான் அதிக அளவில் இருசக்கர வாகனகளை பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதால், பல்வேறு சிரமங்கள் ஏற்படும்.ஆகையால், அரியாங்குப்பம் - கடலுார் சாலை, வில்லியனுார் - விழுப்புரம் சாலை, காலாப்பட்டு- இ.சி.ஆர்.அய்யாங்குட்டி பாளையம் - வழுதாவூர் சாலைகளில் ஹெல்மெட் போடுவது கட்டாயமாக்கலாம். மற்ற நகர சாலைகளில் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
08-Jan-2025