உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற கோரிக்கை

பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற கோரிக்கை

புதுச்சேரி: பா.ஜ., பிரமுகர் உமா சங்கர் கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும் என, ஜான்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.இதுகுறித்து, அவர், கூறியதாவது:புதுச்சேரி பா.ஜ., பிரமுகர் உமாசங்கர் நேற்று முன்தினம் நள்ளிரவில், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர், எங்கள் குடும்பத்தில் மிகவும், அன்பாக பழகினார். அவர் கொலை செய்யப்பட்ட தகவலறிந்த, நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டறிந்துள்ளனர். உண்மையான குற்றவாளிகளை பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும். முதல்வரும், உள்துறை அமைச்சரும் உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான நீதி விசாரணை இல்லை என்றால், இந்த கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை