உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விவசாய இடுபொருட்கள் தயாரிக்க செயல் விளக்க முகாம்

 விவசாய இடுபொருட்கள் தயாரிக்க செயல் விளக்க முகாம்

வில்லியனுார்: புதுச்சேரி வேளாண் துறை சார்பில், ஒதியம்பட்டு கிராமத்தில் இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த செயல்விளக்க முகாம் நடந்தது. புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், மங்கலம் மற்றும் ஒதியம்பட்டு உழவர் உதவியக பகுதி விவசாயிகளுக்கு இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த செயல் விளக்க முகாம் நடந்தது. செயல் விளக்க முகாமிற்கு வில்லியனுார் கோட்ட துணை வேளாண் இயக்கு னர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ், பஞ்சகாவியா செய்வது குறித்து செயல் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் மங்கலம் மற்றும் ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வில்லியனுார் உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் களப்பணியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ