உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நினைவூட்டல் ஆர்ப்பாட்டம்

நினைவூட்டல் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. முதலியார்பேட்டை ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அருள்மணி தலைமை தாங்கினார். இதில், சங்கத்தின் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் 14 ஆண்டுகளாக பணியாற்றும் மகளிர் நடத்துனர்கள், ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்.டி.ஓ., அலுவலகத்தை ஊழியர்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை