உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்

டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்

புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் நடந்த, டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தை அனிபால் கென்னடி எல்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரியில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், உப்பளம் தொகுதியில் கொசு மருந்து தெளிப்பு மற்றும்புகை மருந்து அடிக்கும் பணிகள், மகளிர் சுய உதவிக்குழுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.டெங்கு, சிக்குன்குனியா தடுப்பு நடவடிக்கையாக, சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி மூலம் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தை அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்து,பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்.மலேரியா உதவி இயக்குனர் வசந்தகுமாரி, மருத்துவ அதிகாரி ஆனந்தி, நகராட்சி அதிகாரி ஆர்த்தி,சேதுபதி, மதிழகன், சுகாதார உதவியாளர்கள் ஜெயா, பிரீத்தி, தேன்மொழி, தீபா, தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை