டெங்கு தடுப்பு பணி எம்.எல்.ஏ., ஆய்வு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் நடந்து வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனையடுத்து அரசு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தட்டாஞ்சாவடி தொகுதியல் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்து கழிவு நீரை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை அசோக்ஆனந்த் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.