| ADDED : நவ 13, 2025 06:44 AM
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சார்பில், வெங்கடேஸ்வரா பல் மருத்துவமனை மூலம் போலீசாருக்கான இலவச பல் பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது. கோரிமேடு, சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமிற்கு, எஸ்.பி., ரட்சினா சிங் வரவேற்றார். டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமில், அரியூர் வெங்கடேஸ்வரா பல் மருத்துவமனையின் டாக்டர் ஷோபனா தலைமையிலான மருத்துவ குழுவினர் போக்குவரத்து போலீசார்மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். இதில், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுரேஷ்பாபு, நியூட்டன், கிட்லா சத்யநாராயணா உட்பட பலர் கலந்துகொண்டனர்.