உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலைபண்பாட்டுத் துறை ஆண்டறிக்கை: முதல்வர் வெளியீடு

கலைபண்பாட்டுத் துறை ஆண்டறிக்கை: முதல்வர் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி கலைப் பண்பாட்டுதுறையின் ஆண்டறிக்கையை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் வெளியிட்டார்.துறையின் சிறப்புப்பணி அதிகாரி வாசுகி ராஜாராம் வெயிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி அரசின் கலை, பண்பாட்டுத்துறையின் கீழ் 26.10.2023ம் தேதி தமிழ் வளர்ச்சிச் சிறகம் துவங்கப்பட்டது. அதுமுதல் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்லுாரிகளில் உள்ள மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் ஆகியோரை கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டு வருகிறது.மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் ஒப்புவிக்கும் போட்டி, நாடக போட்டி, விவாத மேடைகளை நடத்தி வருகிறது. தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்குபெறும் வகையில் வரலாற்றில் புதுச்சேரி மற்றும் மாசிமகக் கருத்தரங்கினை சிறப்பாக நடத்தியதோடு, வரலாற்றில் காரைக்கால் மற்றும் காரைக்கால் வழிபாட்டுத் தலங்களும் வழிபாட்டு முறைகளும் குறித்த கருத்தரங்குகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என, முதல்வர் அறிவிப்பை கடைகள் தோறும் துண்டறிக்கையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி வருகின்ற தமிழ் வளர்ச்சிச் சிறகத்தின் ஆண்டறிக்கையை முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி சட்டசபையில் நேற்று வெளியிட்டார். அதனை கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் தமிழ் வளர்ச்சிச் சிறகத்தின் சிறப்புப் பணி அதிகாரி வாசுகி ராஜாராம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை