உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வடிவமைப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி முகாம்

 வடிவமைப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி முகாம்

பாகூர்: பாகூரில் கைவினை பொருட்கள் சேவை மையம் சார்பில், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. தீபம் கல்வி திறன் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி கைவினை பொருட்கள் சேவை மையம் இணைந்து, புதுச்சேரியை சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 30 கைவினை கலைஞர்களுக்கு கை தையல் கைவினை தொழில்நுட்பம் வழங்கும் நோக்குடன், 'வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சி முகாமின் துவக்க விழா பாகூரில் நடந்தது. பயிற்சி மைய தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் ஸ்டீபன் ராஜ் வரவேற்றார். புதுச்சேரி கைவினை பொருட்கள் சேவை மைய உதவி இயக்குனர் ரூப் சந்தர், கைவினை சேவை மையத்தின் திட்டங்கள், கைவினை பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கினார். லக்னோவை சேர்ந்த எம்பிராய்டரி டிசைனர் ஆஷிஷ் 'கைத்தையல் கைவினைத் திறன் வளர்ச்சி குறித்து பேசினார். நாகர்கோவில் முதன்மை கைவினை நிபுணர் பத்மா குமாரி சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். பயிற்சி வரும் 8ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ